Friday, September 07, 2012

thumbnail

விநாயக சதுர்த்தி-விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

விநாயக சதுர்த்தி நெருங்கி வருதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகளில், வித்தியாசமான தோற்றம் கொண்ட சிலைகளுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது என, சிலை தயாரிப்பு பணியில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.வட மாநிலங்களைப் போல், தமிழகத்திலும், விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இந்தாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா, செப்டம்பர் 19ம் தேதி நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகளை பக்தர்கள் வைத்து வழிபாடு நடத்தி, அவற்றை ஆற்றில் கரைப்பது வழக்கம். அதை முன்னிட்டு பரவலாக விநாயகர் சிலைகள் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீப காலமாக, வித்தியாசமான தோற்றத்தில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகத்து வருகிறது. அதன் காரணமாக, சிம்ம வாகனம், யானை வாகனத்தில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிப்பது போன்ற பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதையடுத்து, அவற்றுக்கான ஆர்டர்களும், சிலை தயாரிப்போருக்கு குவிந்த வண்ணம் உள்ளது.இதுகுறித்து, நாமக்கல் செல்வ விநாயகர் கலைக்கூட உரிமையாளர் பிரபாகர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயர் சிலைகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டோ பாரீஸில் சிலை தயார் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.பத்து செ.மீ., உயரம் முதல், 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. சிலையின் அளவைப் பொறுத்து, அவற்றை தயார் செய்வதற்கான கால நேரம் பிடிக்கும்.மூன்றடி உயரம் வரை களி மண்ணால் சிலைகள் செய்யப்படும். அதற்கு அதிகமான உயரம் கொண்ட சிலைகள், கிழங்கு மாவு, பேப்பர் கூழ் மூலம் தயார் செய்யப்படும். சிலையின் சைஸ், ஸ்வாமி அமர்ந்துள்ள வாகனம், வண்ணத்திற்கு தகுந்தாற் போல் விலை நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.ஆர்டரின் பேரிலும் சிலைகள் தயார் செய்யப்படுகிறது. 12 அடிக்கு மேல் சிலை வைக்க போலீஸ் அனுமதியில்லை. எனவே, 12 அடி வரை மட்டுமே சிலைகள் செய்யப்படுகிறது. களிமண் சிலை வேண்டுவோருக்கு, அந்த மெட்டீரியலில் சிலைகள் செய்து தரப்படுகிறது.பண்டிகை நெருங்குவதால், விநாயகர் சிலை தயாரிப்பு பணி ஜரூராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் மற்றும் துறையூர், கரூர் மாவட்டத்துக்கும் சிலைகள் தயார் செய்து விற்பனைக்கு அனுப்புகிறோம்.இவ்வாறு கூறினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About