Friday, September 07, 2012

thumbnail

பொருளாதார சரிவிலிருந்து அமெரிக்காவை மீட்பேன்: ஒபாமா வாக்குறுதி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக்கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் ஒபாமா, குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியுடன் நீயா, நானா? போட்டியில் உள்ளார்.
 
இந்த நிலையில், வடக்கு கரோலினா மாகாணத்தில், சல்லோட்டி பகுதியில் ஒபாமா தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் ஒபாமா பேசினார்.
 
அப்போது அவர், நாம் கடின பாதையை கடந்து போக வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால் நல்ல இடத்துக்கு செல்வோம். நமது பாதை நீளமானது. ஆனால் நாம் இணைந்து பயணிப்போம். 2016ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம். 2015க்குள் ஏற்றுமதியை இரு மடங்கு ஆக்குவோம். கச்சா எண்ணெய் இறக்குமதியை 2020க்குள் பாதியளவுக்கு குறைப்போம். 10 லட்சம் கணிதம், அறிவியல் ஆசிரியர்களை அடுத்த 10 ஆண்டுகளில் நியமிப்போம். பொருளாதார சரிவிலிருந்து அமெரிக்காவை மீட்போம் என வாக்குறுதி அளித்தார்.
Tags :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About