Tuesday, September 18, 2012

thumbnail

கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜெர்ரி ஸ்டாலின், அதேபோன்ற தாள லயத்துடன் தமிழ்நெறியைப் புகழ்ந்து எழுதியுள்ள பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யூ ட்யூப் தளத்தில் இப்பாடலை இதுவரை 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர்வரை பார்த்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

அப்பாடல் இங்கே வரிவடிவில்:

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?

என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…

நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்

செந்தமிழ் நாட்டில்

தமிழிற்கேன் பஞ்சம்?

தமிழை விற்று

பதக்கம் வாங்கும்

தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…

வள்ளுவன் குறள்கள்…

பாரதி கவிகள் எங்கே?

தொன்று தொட்டு…

பழமை பாடும்…

தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா

என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,

காந்தி சொன்ன

அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை

படித்து வந்தால்

தணியும் கொலவெறி பாரு..!

ஆஸ்கார் வாங்கிய

தமிழன் சபையில்

பெருமை சேர்த்தான் தமிழில்

செம்மொழி பாடிய

புரட்சிக் கவிஞன்

தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு

இன்னும் தாங்காதடா மனசு

தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு

நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்

வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…

தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்

நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்

உண்மைக் கலைஞனில்ல – அவன்

கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்

அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா

என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா

எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About