Saturday, September 01, 2012

thumbnail

அசாம் எண்ணெய்க் கிணற்றில் திடீர் தீ: தீவிரவாதிகள் கைவரிசையா?

அசாம் எண்ணெய்க் கிணற்றில் திடீர் தீ: தீவிரவாதிகள் கைவரிசையா?
அசாம் மாநிலம் தீன்சுகியா மாவட்டம் சந்த்மரி கிராமத்தில் உள்ள எண்ணெய் கிணற்றில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாகப் போராடி அதிகாலை 5 மணியளவில் தீயை அணைத்தனர். இதையடுத்து எண்ணெய்க் கிணறு மூடப்பட்டது.
 
எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. விசாரணையில், எண்ணெய்யை திருட முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 
 
உயர் அழுத்தம் கொண்ட எண்ணெய்க் கிணற்றின் வால்வில் திருடர்கள் துளை போட்டுள்ளனர். அப்போது திரவ ஹைட்ரோ கார்பன் வெளியேறி, திடீரென தீப்பற்றியதாக எண்ணெய் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜிஷ்னு சர்மா தெரிவித்தார்.
 
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், அப்பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
 
இச்சம்பவத்திற்கு உல்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About