Friday, September 14, 2012

thumbnail

இனி ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 விலைக்கு.. 7வது சிலிண்டர் விலை ரூ.733.50!!

இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதே போல சமையல் கேசுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தாவிட்டாலும், அதன் சப்ளை'யில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.

இப்போது 14.2 கிலோ எடை கொண்ட சமையல் ஒரு கேஸ் சிலிண்டரின் உண்மையான விலை ரூ.733.50 ஆகும். ஆனால், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் மத்திய அரசு ரூ.347 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இதனால் நமக்கு சிலிண்டர் ரூ.386.50க்கு விற்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இந்த மானியத்தை ஒரு வருடத்துக்கு முதல் 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மக்கள் உண்மையான விலையைத் தர வேண்டும்.

இதனால் இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும். இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும்.

இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

சந்தை விலையான ரூ.733.50 கொடுத்து ஆண்டுக்கு எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு உச்ச வரம்போ, கட்டுப்பாடோ நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தக் கட்டுப்பாட்டால் வருடத்துக்கு 6 சிலிண்டர்களுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால் அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் கிட்டத்தட்ட இரு மடங்கு விலை கொடுத்துதான் ஒவ்வொரு கூடுதல் சிலிண்டரையும் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About