Sunday, September 23, 2012

thumbnail

5 இடங்களில் விநாயகர் சிலை கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் இன்றும் இரண்டாவது நாளாக  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன் பிடி துறைமுகம், நீலாங்கரை, திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

இந்த 5 இடங்களுக்கும் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. லாரி மற்றும் டிரக்குகளில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இணை ஆணையர்கள் ரவிக்குமார், சண்முகேஸ்வரன் மற்றும் துணை ஆணையர்கள் புகழேந்தி, பாவானிஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About