Tuesday, September 18, 2012

thumbnail

ஐ-போன் 5 விற்பனை ஓகோ

தலைகால் தெரியாத மகிழ்ச்சியில் மிதக்கிறது ஆப்பிள் நிறுவனம். ‘புதிய ஐ-போன் 5’ விற்பனை எப்படியுள்ளது என்ற அறிவிப்பை பெருமையுடன் வெளியிட்டிருக்கிறது அந்த நிறுவனம்.


கடந்த வெள்ளிக்கிழமை ஆன்லைன் ‘ப்ரீ ஆர்டர்’ திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஸ்டாக் தீர்ந்துவிட்டது என்பது பழைய செய்தி .அதை ஒப்புக்கொண்டுள்ள ஆப்பிள், நேற்று மாலை விற்பனை விபரத்தை வெளியிட்டது.

அதன்படி, முதல் 24 மணி நேரத்தில் எத்தனை ‘ஐ-போன் 5’ விற்பனையாகின தெரியுமா? 2 மில்லியன்!

ஆப்பிள் நிறுவன வரலாற்றிலேயே இதுவரை ‘ஐ-போன் 4’ விற்பனைதான் ரிக்கார்டாக இருந்தது. இப்போது, ‘ஐ-போன் 5’ விற்பனை அதைவிட இரு மடங்கு அதிகம்!

ஐ போன் 4 எஸ்ஸை விட 18% மெல்லியதாக இருக்கும் ஐ போன் 5 வெறும் 7.66 மி,மீ தடிமனும் 112 கிராம் எடையும் கொண்டதாகும். இது ஐ போன் 4 எஸ்ஸை விட 20% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஐ போன் திரையும் வழக்கமான 3.5 இஞ்சிலிருந்து 4 இஞ்சாக அதிகரித்துள்ளதோடு 4 எஸ்ஸை விட இரண்டு மடங்கு வேகமாக இயங்கும் வகையில் ப்ராஸ்ஸர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் கண்ணாடி மற்றும் அலுமினியத்தால் ஆன ஐ போன் 5 தன்னுடைய பேட்டரி இயங்கும் நேரத்தையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் வந்துள்ள ஐ போன் 5 4 ஜி டெக்னாலஜியுடன் வந்துள்ளது.

“‘ஐ-போன் 5’ விற்பனை ஓகோ என்று இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்தளவுக்கு விண்ணை முட்டும் விற்பனையை நாம் கனவிலும் நினைத்ததில்லை. இதற்கு நாம் தயாராகவும் இல்லை. முதல் தினத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த அனேகருக்குகூட, அக்டோபர் மாதம்தான் போன்களை டிலிவரி செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About