Saturday, September 01, 2012

thumbnail

தங்கம் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு


தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை ஒரு பவுன் 23 ஆயிரத்தை கடந்தது. பின்னர் விலை ஏறியும், இறங்கியும் விற்றது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 616 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2952க்கு விற்கிறது. தற்போது திருமண சீசன் என்பதால தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒரு கிலோ வெள்ளி ரூ.60 ஆயிரத்து 975 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 65.20க்கு விற்கிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About