Saturday, September 01, 2012

thumbnail

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 28 பேர் சிங்கள கடற்படையால் சிறை பிடிப்பு

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்குவது சிறைபிடிப்பது வலைகளை அறுத்து மீன்களை கொள்ளையடிப்பது போன்ற அத்துமீறிய செயல்களை இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு தலைவர்கள் பிரதமரை வற்புறுத்தி வருகின்றனர் என்றாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மறுநாளும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் இன்று கச்சத்தீவு அருகே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து பிடித்துச் சென்றனர். இதில் 28 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About