Saturday, August 04, 2012

thumbnail

ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம், இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது/Toyota Kirloskar had announced it would set up an engine plant and expand its transmissions unit to cater to its latest sedan Etios and hatchback Etios Liva, with a combined investment of Rs 500 crore.

ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம், இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் எதியோஸ் மற்றும் லிவா கார்கள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும், இந்த கார்கள் கிடைக்கின்றன. இந்த சூழ்நிலையில், பெங்களூருவை அடுத்த பிடதியில், டொயோட்டோ நிறுவனம் ரூ.500 கோடி தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது. இங்கு, இன்ஜின்கள் மற்றும் கியர்பாக்ஸ்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் உற்பத்தி விரைவில் துவங்க உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஒரு லட்சம் இன்ஜின்களும், 2.4 லட்சம் கியர்பாக்ஸ்களும் தயாரிக்க முடியும்.
தற்போது டொயோட்டா நிறுவன கார்களுக்கு தேவையான இன்ஜின்களும், கியர்பாக்ஸ்களும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இது சுங்க வரிக்கு ஆளாகிறது. எனவே தான் எதியோஸ் மற்றும் லிவா கார்களின் விலை சற்று அதிமாக உள்ளது. பிடதி தொழிற்சாலையில், இன்ஜின்களும், கியர்பாக்ஸ்களும் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டால், சுங்க வரி பிரச்னை இல்லை. எனவே, எதியோஸ் மற்றும் லிவா கார்களின் விலை குறையும் வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில், பிடதி தொழிற்சாலையில் டீஸல் இன்ஜின் உற்பத்தி செய்யப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. டீஸல் இன்ஜினும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டால், டொயோட்டாவின் கரோலா அல்டீஸ், எதியோஸ் மற்றும் லிவா கார்களின் டீஸல் மாடல்களின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று கார்களிலும், 1.4 லிட்டர் டி-4டி காமன் ரயில் டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About