Wednesday, August 08, 2012

thumbnail

கிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )

கிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )

நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்திப் பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இது ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராச லீலா, தகிஅண்டி என பல பெயர்களில், பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுள அஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம். ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்தவிதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நடைமுறைகூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான்.

மற்ற திதிகள்போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில் மகா விஷ்ணு, நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராமநவமி என்று கொண்டாடுகிறோம். கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீ கண்ணனாக அவதரித்த தினத்தை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்கு உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது. இப்படி ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள், தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம். இதைத்தான், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூவித்தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவா னின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்...’

என்று பாடியருளி, விஷ்ணுவை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில்பட்ட தூசாக அழியும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பாலும் ஆவணி மாதத்தில்தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஒன்றும் ஆவணி மாதத்தில் ஒன்றும் வருகிறது. நாளை கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி வருகிறது.

 

================================================================================
திரைப்படம்:               தசாவதாரம்
பாடல்:              முகுந்த முகுந்த
பாடகர்கள்:                   கமல் ஹாசன், சாதனா சர்கம்
இசை:                ஹிமேஷ் ரேஸ்மையா
================================================================================
க்ரிஷ்ன
முகுந்த முகுந்த
வரம்தா வரம்தா
ப்ரிந்தவனம் வனந்தா
முகுந்த முகுந்த
க்ரிஷ்ன
முகுந்த முகுந்த
வரம்தா வரம்தா
ப்ரிந்தவனம் வனந்தா

வெண்ணை உண்ட வாயால்
மண்ணை உண்ண்டவ
பெண்ணை உண்ட காஹல் நோய்க்கு
மருந்தாக வா

முகுந்த முகுந்த
க்ரிஷ்ன
முகுந்த முகுந்த
வரம்தா வரம்தா
ப்ரிந்தவனம் வனந்தா

என்ன செய்ய்ய
நானும்
தோல் பாவைதான்
உந்தன் கைகள்
ஆட்டிவைக்கும்
நோய் பாவிதான்

முகுந்த முகுந்த
க்ரிஷ்ன
முகுந்த முகுந்த
வரம்தா வரம்தா
ப்ரிந்தவனம் வனந்தா

ஜை ஜை ரம்
ஜை ஜை ரம்
ஜை ஜை ரம்
ஜை ஜை ரம்
சீத ரம்
ஜை ஜை ரம்
ஜை ஜை ரம்
ஜை ஜை ரம்

நீ இல்லாமல் என்றும் இங்கே
இயங்காது பூமி
நீ அரியா செதி இல்லை
எங்க க்ரிஷ்னஸ்வமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால்
புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆடவிட்டு
அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞ்யானம் தோர்திடாது
விக்ன்யானம் ஏது
அரியாதார் கதை போலே
அக்ன்யானம் ஏது
அன்று அர்ஜுனக்கு நீ உயர்தாயே
பொனான கீதை
உன் மொழி கேட்ட்க
உருகிராளே
இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ
வசுடெவனே
வந்தாலே வாழும் இங்கு
என் ஜீவனே

முகுந்த முகுந்த
க்ரிஷ்ன
முகுந்த முகுந்த
வரம்தா வரம்தா
ப்ரிந்தவனம் வனந்தா

மச்சம் ஆக நீரில்
தோன்றி
மரைகள் தன்னை காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி
பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றம் கோண்டு
வான் அளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மம் ஆகி
இரனியனை கொன்றாய்
ரவனந்தான் தலையை கொய்ய்ய
ரமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து
காதலும் தந்தாய்
இங்கு உனவதாரம்
ஒவ்வொன்றிலும்தான்
உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால்
திருமணம் ஆகும்
என்றே (எங்கே) ஏங்குகிரேனே
மயில் தோகை (பயெலை?) சூடி நிர்க்கும்
மங்கைக்கு என்றும் நீயே
மணவாளனே

முகுந்த முகுந்த
க்ரிஷ்ன
முகுந்த முகுந்த
வரம்தா வரம்தா
ப்ரிந்தவனம் வனந்தா

உசுரோட இருக்கான நான் பெட்ற்ற பிள்ள
ஏனோ இன்னும் தகவல் வல்ல
வானதில் இருந்து (இந்து) வந்து குதிப்பான்
சொன்ன கேளுங்கோ அசடுகளே
ஆரவமுத
அழக வாட
ஒடனே வாட
வாடா...
கொவிண்ட (கௌக்), கொபல (கௌக்)

முகுந்த முகுந்த
க்ரிஷ்ன
முகுந்த முகுந்த
வரம்தா வரம்தா
ப்ரிந்தவனம் வனந்தா
முகுந்த முகுந்த
க்ரிஷ்ன
முகுந்த முகுந்த
வரம்தா வரம்தா
ப்ரிந்தவனம் வனந்தா

ஹ்ம்ம்ம்ம்

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About