Monday, August 27, 2012

thumbnail

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் கே ராமசாமி இன்று பதவியேற்பு /Dr.K.Ramasamy ,taken a charge of new VC of the Tamil Nadu Agricultural University (TNAU), Coimbatore.

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் கே ராமசாமி இன்று பதவியேற்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் (வேளாண் மற்றும் பாசனம்) கே. இராமசாமி திங்கள்கிழமை பதவியேற்கிறார்.

இதற்கான உத்தரவை, தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா பிறப்பித்துள்ளார்.

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான (வேளாண்மை) கே.இராமசாமியைப் புதிய துணைவேந்தராக நியமித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 1948-ல் பிறந்தவர் கே.ராமசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டம் படித்தவர். பெல்சியத்தில் உள்ள கத்தோலிக் லீயுவென் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் முனைவர் பட்டம் முடித்துள்ளார்.

முனைவர் கே.இராமசாமி உயிரித்தொழில்நுட்பம், நுண்ணுயிரியல்துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சில காலம் பணிசெய்து வந்தார்.

மிகச்சிறந்த கல்வியாளரைத் தகுதி அடிப்படையில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க

பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமித்த தமிழக ஆளுநரும், தமிழக

அரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் என்றும் பெருமைக்கும்

பாராட்டிற்கும் உரியவர்களாவர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About