Thursday, August 30, 2012

thumbnail

நில நடுக்கத்தால் பதட்டம்: கலிபோர்னியா நகரில் அவசர நிலை பிரகடனம்


அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், நில நடுக்கத்தால் ஏற்பட்ட பதட்டத்தை அடுத்து, அவசர நிலை அமெரிக்காவின் ஒரு பகுதியில் நேற்று ஐசக் சூறாவளி தாக்கியது. இதன் தொடர்ச்சியாக தெற்கு கலிபோர்னியா நகரான பிராவ்லியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் வீச்சு 5.5 ஆக பதிவானது.


சில நிமிடங்கள் நீடித்த நில நடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. மாடிகளில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர்கள் சாய்ந்து விழுந்தன. பெரிய கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. கடலில் நீர் மட்டம் உயர்ந்து, தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. உயிர்ச்சேதங்கள் இல்லாவிட்டாலும், ஏராளமான பொருள் சேதங்கள் ஏற்பட்டன.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். நில நடுக்கத்தால் பள்ளி கட்டிடங்கள், தேசிய மாட்டிறைச்சி கூடம், அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.

மின் கம்பங்கள், மின் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார சப்ளை கிடையாது. குடிதண்ணீர் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. பதட்டத்தை போக்கவும், மின்சப்ளை, குடிநீர் வினியோகம், கட்டிடங்கள், சாலைகளை விரைந்து செப்பனிட வசதியாக, கலிபோர்னியா நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தினரும், அரசு ஊழியர்களும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About