Monday, August 27, 2012

thumbnail

செவ்வாயின் தரையில் என்ன உள்ளது? 'கியூரியாசிட்டி'யிலிருந்து 'தாக்கல்' வந்தது!

செவ்வாயின் தரையில் என்ன உள்ளது? 'கியூரியாசிட்டி'யிலிருந்து 'தாக்கல்' வந்தது!
நாசா: செவ்வாய் கிரகத்தின் தரைத்தளம் குறித்த புதிய தகவல்களை கியூரியாசிட்டி விண்கலத்தின் செம்கேம் (Chemistry and Camera) லேசர் காமரா அனுப்பியுள்ளது. இதுவரை கிடைத்திராத புதிய தகவல்கள் இதில் அடங்கியிருப்பதால் கியூரியாசிட்டியை கண்காணித்து வரும் செவ்வாய் கிரக அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியும், திரில்லும் அடைந்துள்ளனர். மிகவும் அருமையான முடிவுகளை கியூரியாசிட்டி அனுப்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கியூரியாசிட்டியின் செம்கேம் லேசர் கேமரா மூலம் இந்த லேசர் ஒளிக்கற்றைப் படங்கள். கிட்டத்தட்ட 500 ஒளிக்கற்றைப் படங்களை செம்கேம் அனுப்பிக் குவித்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிரக தரைத்தளத்தின் கட்டமைப்பு குறித்த உறுதியான, தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செம்கேம் லேசர் காமராவை கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளவரான லாஸ் அலமோஸில் உள்ள தேசிய பிளானட்டரி ஆய்வக விஞ்ஞானி ரோஜர் வெய்ன்ஸ் கூறுகையில்,இதைப் பார்த்தால் பூமியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மிகவும் அரிய தகவல் இது. இந்தப் படங்களைப் பார்த்து நாங்கள் பெரும் குஷியாகி விட்டோம். அந்தக் குஷியில் கொஞ்சம் சாம்பெய்னையும் கூட எடுத்து வாயில் விட்டுக் கொண்டோம் என்றால் பாருங்களேன் என்றார் படா குஷியுடன்.
அடுத்து இந்தப் படங்களையும், பூமியின் தரைத்தளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறார்கள் நாசா விஞ்ஞானிகள். மேலும், செவ்வாயில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளையும் படம் எடுத்து அனுப்பப் போகிறது கியூரியாசிட்டி. அதையும் பூமியில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கவுள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள படங்களின்படி, செவ்வாயின் தரைத் தளமானது, ஹைட்ரஜன் மற்றும் மெக்னீசியத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About