Thursday, August 30, 2012

thumbnail

கிறிஸ்தவ தொண்டு நிறுவன மோசடி: பெண் ஏஜன்ட் மீது புகார்

சென்னை:கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்த, தொண்டு நிறுவன பெண் ஏஜன்ட் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த திவ்யா,34, மற்றும் நாகம்மா,50, உள்ளிட்ட, 40 பேர் நேற்று காலை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள், கமிஷனரிடம் கொடுத்த புகார்:சென்னை, "ஹெச்.ஐ.எம்.,' என்ற பெயரில், தொண்டு நிறுவனம் நடத்தி, கிறிஸ்தவ மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பறித்த, ஜான் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாக உள்ளனர்.

திருமுல்லைவாயலைச் சேர்ந்த லீலாவதி, ஜான் பிரபாகரனின் ஏஜன்டாக செயல்பட்டார். எங்களை சந்தித்த லீலாவதி, "ஒரு முறை, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், தொண்டு நிறுவனத்தின் மூலம், மாதம், 1,250 ரூபாய் கிடைக்கும்' என்றார்."அவ்வளவு தொகையை, மாதா மாதம் எப்படி கொடுக்க முடியும்' எனக் கேட்டோம். வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனத்திற்கு, அதிகளவில் பணம் வருவதாக, லீலாவதி எங்களிடம் கூறினார்.

அதை நம்பி, லீலாவதியிடம் பணத்தை கொடுத்தோம். எங்கள் பகுதியைச் சேர்ந்த, 500 பேரிடம், 65 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு, ஜான் பிரபாகரன் மற்றும் லீலாவதி உட்பட, அவரது ஏஜன்டுகள் தலைமறைவாகி விட்டனர். மோசடி கும்பலை கைது செய்து, எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About