Friday, August 31, 2012

thumbnail

மழையால் தாமதமானது: அண்ணா நூற்றாண்டு வளைவு நாளை இடிக்கப்படுகிறது- பஸ் போக்குவரத்து மாற்றம்

சென்னை நகரின் முக்கிய பகுதியான அண்ணாநகருக்கு பூந்தமல்லி  சாலையில் இருந்து செல்லும் நுழைவு வாயிலில் அண்ணா நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு வளைவு முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் வைர விழா பிறந்தநாள் நினைவாக கட்டப்பட்டது.

இதை மறைந்த எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1986-ம் ஆண்டு திறந்து வைத்தார். 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த வளைவை  ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார். சிறப்பு வாய்ந்த அண்ணா நினைவு வளைவு நாளை (சனிக்கிழமை) அங்கிருந்து அகற்றப்படுகிறது. பூந்தமல்லி சாலை, நெல்சன் மாணிக்கம் ரோடு, அண்ணாநகர் ரோடு ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவானதால் அந்த பகுதியில் 3 சாலைகளிலும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. ரூ.117 கோடி செலவில் மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்ட ஒதுக்கியுள்ளது.

மேம்பாலம் கட்டுவதற்கு அண்ணா நூற்றாண்டு வளைவு இடைïறாக இருப்ப தாக கருதியதால் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. அங்குள்ள வளைவுகளை கிரேன் மூலம் தூக்கி எடுக்கவும் மற்ற பகுதிகளை இடித்து சமப்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து அந்த பணிகளை தொடங்கி உள்ளது.

கடந்த வாரம் அண்ணா நூற்றாண்டு நினைவு தூண் இடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த பணி தொடர முடியவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தாதமானது. தற்போது நிலைமை சீரானதால் நூற்றாண்டு வளைவை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவில் இந்த பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீசாரின் அனுமதியையும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்  பெற்று தயாராக இருக்கிறார்கள். எனவே நாளை இரவு இந்த பணி தொடங்கப்படுகிறது. அகற்றப்படும் 2 வளைவுகளும் அண்ணாநகர் 3-வது அவென்யூ அருகே கூவம் ஆற்றோரம் நிறுவப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வளைவு அகற்றப்பட்டு தூண்கள் இடிக்கப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.   

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About