Sunday, August 19, 2012

thumbnail

81-வது பிறந்த நாள் சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார் படத்துக்கு மரியாதை

மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தியின் 125-வது பிறந்த நாள், ஜி.கே.மூப்பனாரின் 81-வது பிறந்த நாள் விழாக்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் இருவரது உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரிகள் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், இளங்கோவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எச்.வசந்தகுமார், பீட்டர்அல்போன்ஸ், யசோதா, யுவராஜ், சவுந்தர்முருகன், கே.சிரஞ்சீவி, ராயபுரம் மனோ, வில்லிவாக்கம் சுரேஷ், ஜி.ஆர்.வெங்கடேஷ், குரோம்பேட்டை டி.என்.அசோகன், ஜெ.புஷ்பராமன், டி.எம்.பிரபாகரன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. வதந்தி பரப்பும் எஸ்.எம்.எஸ். வீடியோ தகவல்கள் அனைத்தும் வெளிநாட்டு சதி என்ற தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரங்களில் பா.ஜனதா ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்கும். பின்னர் அப்படியே விட்டு விடும். இப்போது சிறுபான்மை மாணவர் கல்வி உதவி தொகையை கிளப்புகிறார்கள்.

சச்சார் கமிட்டி இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை ஆராய்ந்து வழங்கிய பரிந்துரை அடிப்படையில்தான் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு திட்டங்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் நடத்த வில்லை. டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு.

இலங்கையில் தமிழர்களும் சம உரிமையுடன் வாழ்வது, ராணுவத்தை திரும் பெறுதல் போன்ற நடவடிக்கையை நாங்களும் வலியுறுத்துகிறோம். தமிழர்கள் வாழும் பகுதியில் ரெயில் பாதைகள் அமைக்கும் பணி மத்திய அரசு உதவியுடன் நடக்கிறது. தமிழர்கள் மறு வாழ்வுக்காக மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About