Wednesday, August 29, 2012

thumbnail

அமெரிக்காவை மிரட்டும் புயல்: 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு

கரீபியன் கடலில் ஏற்பட்ட இசாக் புயல் கெய்தி மற்றும் டொமினிகள் குடியரசு நாடுகளில் கடுமையாக தாக்கியது. இப்புயலுக்கு கெய்தியில் 24 பேர் பலியாகினர்.

அதே நேரத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் லேசான சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது அது கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் அங்குள்ள நியூஒன்லியன்ஸ் நகரம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

2005-ம் ஆண்டு இங்கு கத்ரீனா புயல் தாக்கியது. அதில் 1,800 பேர் பலியாகினர். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நகரை மீண்டும் புயல் தாக்கும் அபாயம் உள்ளது.

எனவே லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் ஒபாமா பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டெலிவிஷனில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எச்சரிக்கையையும், மிரட்டலையும் மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும். எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About