Thursday, August 23, 2012

thumbnail

சத்தியமங்கலத்தில் கொப்பரை தேங்காய் மோசடி: ரூ.200 கோடி அபேஸ்

சத்தியமங்கலத்தில் உள்ள நந்து கொப்பரா என்ற நிறுவனம் ரூ.1,50,000 கட்டினால், வாரம் ரூ.4,000 தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது.மேலும் நாட்டுக்கோழி வியாபாரத்தில் ரூ.1 லட்சம் கட்டினால், மாதம் 8,000 தருவதாகவும் வாக்குறுதி அளித்தது.
இதனை நம்பிய முதலீட்டாளர்கள் பல லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் விளம்பரத்தில் கூறியபடி நந்து நிறுவனம் பணம் தரவில்லை. நிறுவனத்தின் உரிமையாளர் நந்தகுமார் திடீர் என்று தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் நந்து கொப்பரை நிறுவனம் மீது ஈரோடு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான நந்து நிறுவனத்தின் உரிமையாளர் நந்தகுமாரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏற்கனவே ஈமு கோழி மோசடி, நாட்டுக்கோழி மோசடி வரிசையில் தற்போது கொப்பரைத் தேங்காய் மோசடியும் சேர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடத்தில் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் கு. செல்லமுத்து, கொப்பரைத் தேங்காய் மோசடி பற்றி எச்சரித்திருந்தார். அவர் கூறி சில தினங்களுக்குள் இந்த மோசடி வெளியே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About