Monday, August 27, 2012

thumbnail

ஓணம் விற்பனைக்காக 20 டன் திண்டுக்கல் வாடா மல்லி/Dindukal vadamalli 20 ton - Kerala Onam Festival


திண்டுக்கல்:கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக, திண்டுக்கல் வாடா மல்லி பூக்கள் அனுப்புவது அதிகரித்துள்ளது.கேரளாவில் வரும் ஆக., 29ல் ஓணம் கொண்டாடப்படுகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, ஏராளமான வாடாமல்லி பூக்கள் அனுப்பப்படுகின்றன. தினமும் 15 மினி லாரிகளில், 20 ஆயிரம் கிலோ வரை பூக்கள் அனுப்பப்படுகின்றன. ஒரு கிலோ வாடா மல்லி, 50 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.திண்டுக்கல் பூ மார்க்கெட் பொருளாளர் சகாயம் கூறியதாவது:ஓணம் பண்டிகைக்கு இங்கிருந்து வாடா மல்லி பூக்கள் மட்டுமின்றி செண்டுமல்லி, அரளி, மரிக்கெழுந்து பூக்களும் விற்பனையாகின்றன. கேரளாவில் மழை குறைவாக இருந்தாலும் ஓணம் பண்டிகையையொட்டி, பூக்கள் வாங்குவது குறையவில்லை, என்றார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About