Sunday, August 12, 2012

thumbnail

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது/India close Olympics 2012 campaign with 6 medals - 2 Silvers and 4 Bronze.

லண்டன் ஒலிம்பிக் தொடரின் 66 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார். தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் சுஷில் குமார், ஜப்பானின் டாட்சுகிரோ யோனேமிட்சூவை எதிர்கொண்டார். இதில் சுஷில் குமார் 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார், தற்போது வெள்ளி பதக்கம் கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About