Friday, August 10, 2012

thumbnail

கபினி அணை நிரம்பி வருவதையடுத்து நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது./About 12000 cusecs of surplus water from the Kabini dam in Karnataka has flowed into the Cauvery river.This surplus water came after a spell of heavy rainfall

கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் அடைந்து இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதேபோல் ஹாரங்கி அணையில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கபினி அணை நிரம்பி வருவதையடுத்து நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்த தண்ணீர் நேரடியாக தமிழகத்துக்கு வரும்.
இதே அளவில் தொடர்ந்து கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் இன்று இரவூ மேட்டூர் அணையை வந்தடையூம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 553 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மன்னார்குடி வடுவூர் நெய்வாசல் தென்பாதி தஞ்சை பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்தது. நெய்வாசல் தென்பாதி பகுதியில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவானது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையூம் கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டிருப்பதும் டெல்டா விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியூள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About