Friday, July 13, 2012

thumbnail

அடடா மழைடா அட மழைடா

அடடா மழைடா அட மழைடா

தந்தானே தந்தானே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா..)

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னைப் போல வேராரும் இல்ல
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான்
இந்த கண்ணு போதலையே எதுக்கிவள படைச்சுவைச்சான்
பட்டாம்புச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு என்னை கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..
(அடடா மழைடா..)
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு
இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம்
மழையை பூட்டி யாரும் என் மனச அடைக்க வேண்டாம்


வரிகள்:- ந.முத்துக்குமார்
திரை படம் :- பையா

http://youtu.be/fww7qd70CyQ

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About