Sunday, May 13, 2012

thumbnail

ஈபிள் டவர் போன்று லண்டனில் 376 அடி உயர ஒலிம்பிக் கோபுரம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஈபிள் கோபுரம் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் இது அந்த நகரின் அடையாள சின்னமாகவும் விளங்குகிறது. அதுபோன்று லண்டன் நகரிலும் ஒரு வித்தியாசமான கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. லண்டனில் ஜூலை மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. அதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளதால் ஒலிம்பிக் கோபுரம் என அழைக்கப்படுகிறது.
 
376 அடி (115 மீட்டர்) உயரமுள்ள இந்த கோபுரம் சுருள் வடிவில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓவியர் அனீஷ்கபூர், என்ஜினீயர் சிசில் பால்மாண்டு ஆகியோர் இதை வடிவமைத்துள்ளனர். இந்த கோபுரம் 2 தலங்களை கொண்டதாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. 455 வளைவான மற்றும் சுருளான படிக்கட்டுகள் உள்ளன. இங்கு உணவகங்கள் அமைக்கப்படு கின்றன. இந்த கோபுரம் ஒலிம்பிக் விளையாட்டு மைதானம் அருகே கட்டப்பட்டுள்ளது.
 
எனவே, இதில் ஏறி பார்த்தால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை துல்லியமாக ரசிக்க முடியும். எனவே, இந்த கோபுரத்தில் ஏறி உள்ளே சென்று பார்க்க ரூ.1000 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த கோபுரம் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இதை பலர் ஈபிள் கோபுரத்துக்கு இணையாக பாராட்டுகின்றனர். ஒரு சிலரோ இந்த கோபுரத்தை பார்க்க சகிக்கவில்லை என அங்கலாய்க்கின்றனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

1 Comments

About