Wednesday, April 25, 2012

thumbnail

கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க மாவோயிஸ்டுகள் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது

கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க மாவோயிஸ்டுகள் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவரை மீட்கும் நடவடிக்கையும், அவருக்கான பிரார்த்தனைகளும் தீவிரம் அடைந்துள்ளன.

25-04-2012 
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பது தொடர்பாக, டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படைத் தலைவர் விஜயகுமார், சத்தீஷ்கர் நக்சல் எதிர்ப்பு பிரிவு ஏடிஜிபி ராம் நிவாஸ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். அலெக்சை மீட்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரை மீட்பதற்காக மாவோயிஸ்ட்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த , அரசு தரப்பு தூதர்களாக, மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநில முன்னாள் தலைமைச்செயலாளர்கள் நிர்மலா புஜ்ஜும், எஸ்.கே.மிஸ்ராவும் செல்கின்றனர்.
மாவோயிஸ்டுகள் ஏற்கனவே மத்தியஸ்தர்களாக அறிவித்த பிரசாந்த் பூஷண், மணிஷ் குஞ்சம் ஆகியோர் விலகிவிட்டனர். அவர்களுக்கு பதிலாக ஐதராபாத் மத்திய பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ஹர்கோபால் மற்றும் ஷர்மா மாவோயிஸ்டுகள் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். AlEx – பாதுகாப்பாக இருந்தாலும், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் மருந்து தேவைப்படுவதாகவும் மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர். என்றாலும் அரசுக்கு விதித்த கெடுவை நீட்டிக்கப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அலெக்சை உடனடியாக விடுவிக்குமாறு அவரது மனைவி ஆஷா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அலெக்ஸ் பாலை விரைந்து மீட்கக் கோரி தமிழகத்தின் பல இடங்களில் பேரணியும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. பல்லடத்தில் தனியார் கல்லூரி மாணவ – மாணவிகள் பேரணியாகச் சென்றனர். தூத்துக்குடியில் செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியில் மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலெக்சை விடுவிக்க மாவோயிஸ்டுகள் சிறையில் உள்ள 8 நக்சல்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளனர். கெடு முடியும் கடைசி நாளான இன்று தான் அவர்களுடன் மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இதனால் இன்றைக்குள் அலெக்ஸ் பால் மேனன் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About