Wednesday, June 01, 2016

thumbnail

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. இணையவழி யிலான தமிழ்க் கல்வி, தமிழ்ச் சமயக் கல்வி, கணினித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின் மூலம் பட்டயப் படிப்புகளையும், சான்றிதழ் படிப்புகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் அரிய நூல்களை பதிப்பு செய்யும் பணியையும் செய்து வருகிறது. இவற்றோடு கடந்த 2012 முதல் தமிழ்ப்படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது.




இளம் தமிழ் ஆய்வறிஞருக்கு வழங்கப்பட்டு வரும் வளர்தமிழ் விருது மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமைச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது என்ற பெயரில் வழங்கப்படும்.
சிறந்த நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்களை கவுரவிக்கும் வகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 8 நூல்களையும் வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் விருதும், பாராட்டும் பகிர்ந்து அளிக்கப்படும். இந்த ஆண்டு ரூ.22 லட்சம் மதிப்பில் 12 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுகள் விவரம்:
1. புதுமைப்பித்தன் படைப் பிலக்கிய விருது (சிறுகதை, புதினம், நாடகம்)
2. பாரதியார் கவிதை விருது (கவிதை)
3. அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது (கதை, கவிதை, நாடகம்)
4. ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது (மொழி பெயர்ப்பு நூல்)
5. பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது (தமிழில் அறிவியல் நூல்)
6. ஆனந்த குமாரசாமி கவின் கலை விருது (சிற்பம், ஓவியம், தமிழிசை சார்ந்த நூல்)
7. விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது (கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்)
8. அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது (ஆய்வு நூல்)
(மேற்கண்ட விருதுகள் ஒவ்வொன் றுக்கும் பரிசு தலா ஒன்றரை லட்சம் ரூபாய்)
9. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது (தமிழ்க்கலை, இலக்கியப் பண்பாட்டு இதழ்) - ரூ.1 லட்சம்
10. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுகள் - ரூ.2 லட்சம்
11. பரிதிமாற்கலைஞர் விருது (சிறந்த தமிழறிஞர்) - ரூ.2 லட்சம்
12. பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (தமிழ்ப் பேரறிஞர் வாழ்நாள் சாதனையாளர் விருது) - ரூ.5 லட்சம்
பரிந்துரைகளும், நூல்களும் ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். முகவரி: துறைத் தலைவர், தமிழ்ப் பேராயம், மைய நூலகக் கட்டிடம், 4-வது தளம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், காட்டாங்கு ளத்தூர் 603 203. காஞ்சிபுரம் மாவட்டம். தொலைபேசி எண் 044-27417375.

About