Saturday, February 05, 2011

thumbnail

சென்னை மெட்ரோ ரெயில் -தமிழக வரலாறில் ஒரு மைல் கல்

Chennai Metro Rail (Metro rail limited)
சென்னையின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் ரூ.14,600 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்
மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் இரண்டு வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளது . சுமார் 23.1 கிமீ நீளம் கொண்ட முதல் வழித்தடம் வண்ணாரபேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்னை விமான நிலையம் வரை செல்லும்.

இதில் வண்ணாரபேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை சுரங்கப் பாதையில் ரயில் செல்லும்.

22 கிமீ தூரம் கொண்ட இரண்டாவது வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை செல்கிறது.

இதில் சென்ட்ரலில் இருந்து அண்ணாநகர் வரை சுரங்க பாதையில் ரயில் இயங்கும்.

சுமார் 45.1 கிமீ நீளம் கொண்ட இந்த திட்டத்தில் 24 கிமீ ரயில் பாதை தரைக்கு அடியில் சுரங்கப் பாதையாக அமைக்கப்படும். மிச்சமுள்ள 21 கி.மீ. பாதை பறக்கும் ரயில் பாதையாக பாலத்தில் அமையும்
இத்திட்டம் 2014ம் ஆண்டில் முடிவடைந்து ரயில் ஓடத் துவங்கும்.
இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.14,600 கோடி. இதில் 41 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். மீதத் தொகையை ஜப்பான் அரசு கடனாக வழங்குகிறது.


இத்திட்டத்தில் முதல் கட்டமாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அசோக் நகர் வரை 4.5 கிமீ தூர வழித்தடம் ரூ.199.20 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் ஹைதராபாத்தை சேர்ந்த சோமா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது.இந்தத் திட்டத்துக்கான அறிக்கை 1.11.2007ல் சமர்பிக்கப்பட்டது. 7.11.2007ல் தமிழக அமைச்சரவை திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த பணிகளை நிர்வகிக்க மெட்ரோ ரெயில் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டு, இது இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் ஜப்பான் அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் டோக்கியோ நகரில் கையெழுத்தானது. மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது நினைவுகூறத்தக்கது.

About