Saturday, February 05, 2011

thumbnail

சென்னை மெட்ரோ ரெயில் -தமிழக வரலாறில் ஒரு மைல் கல்

Chennai Metro Rail (Metro rail limited)
சென்னையின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் ரூ.14,600 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்
மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் இரண்டு வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளது . சுமார் 23.1 கிமீ நீளம் கொண்ட முதல் வழித்தடம் வண்ணாரபேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்னை விமான நிலையம் வரை செல்லும்.

இதில் வண்ணாரபேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை சுரங்கப் பாதையில் ரயில் செல்லும்.

22 கிமீ தூரம் கொண்ட இரண்டாவது வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை செல்கிறது.

இதில் சென்ட்ரலில் இருந்து அண்ணாநகர் வரை சுரங்க பாதையில் ரயில் இயங்கும்.

சுமார் 45.1 கிமீ நீளம் கொண்ட இந்த திட்டத்தில் 24 கிமீ ரயில் பாதை தரைக்கு அடியில் சுரங்கப் பாதையாக அமைக்கப்படும். மிச்சமுள்ள 21 கி.மீ. பாதை பறக்கும் ரயில் பாதையாக பாலத்தில் அமையும்
இத்திட்டம் 2014ம் ஆண்டில் முடிவடைந்து ரயில் ஓடத் துவங்கும்.
இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.14,600 கோடி. இதில் 41 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். மீதத் தொகையை ஜப்பான் அரசு கடனாக வழங்குகிறது.


இத்திட்டத்தில் முதல் கட்டமாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அசோக் நகர் வரை 4.5 கிமீ தூர வழித்தடம் ரூ.199.20 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் ஹைதராபாத்தை சேர்ந்த சோமா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது.இந்தத் திட்டத்துக்கான அறிக்கை 1.11.2007ல் சமர்பிக்கப்பட்டது. 7.11.2007ல் தமிழக அமைச்சரவை திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த பணிகளை நிர்வகிக்க மெட்ரோ ரெயில் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டு, இது இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் ஜப்பான் அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் டோக்கியோ நகரில் கையெழுத்தானது. மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது நினைவுகூறத்தக்கது.

Thursday, January 27, 2011

thumbnail

எஸ்.ஆர்.எம் ,லண்டன் ராயல் கல்லுரி ஒப்பந்தம்

சென்னை : லண்டன் ராயல் கல்லூரி மற்றும் எஸ்.ஆர். எம்., பல்கலைக்கும் இடையில், மனநல மருத்துவப் பிரிவை மேம்படுத்தும் வகையில், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.லண்டன் ராயல் கல்லூரி மற்றும் எஸ்.ஆர். எம்., பல்கலையும், மனநல மருத்துவப் பிரிவில் கூட்டாக செயல்படுவதற்கான முயற்சிகள் இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரி வளா கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ராயல் கல்லூரி மனநலப் பிரிவு தலைவர் தினேஷ் புக்ரா மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் சேதுராமன் ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.பேராசிரியர் கணேசன் மற்றும் இந்திய மனநல மருத்துவ சங்க தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக, இருதரப்பு மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் நவீன சிகிச்சை குறித்த பயிற்சி பெறவும், புதுவகை ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் முடியும்; தமிழக மக்களுக்கு நவீன முறையிலான சிறந்த மருத்துவமும் கிடைக்கும்.
thumbnail

தமிழ்நாடு -தேர்தல் களம்-கண்ணோட்டம்

தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, தேர்தல் களம் சூடாகியுள்ளது. பிரதான கட்சிகளான தி.மு.க.,-அ.தி.மு.க.,வின் தலைமையில் இரு அணிகள் தயாராகி வருகின்றன. இந்த அணிகளில் இடம் பெறும் கட்சிகளின் விபரம் முழுமையடையாததால், தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கூட்டணி இறுதி செய்யப்படாததால், பிரச்சார திட்டங்களிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.



தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 13ம்தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேதிக்குள்ளாக, சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, தமிழகத்தில் புதிய அரசு அமைய வேண்டும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், தேர்தல் பணிக்கான முஸ்தீபுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கியுள்ளது.தமிழக சட்டசபைக்கு 2006ம் ஆண்டு அமைந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தலைமையில் இரு அணிகள் அமைந்தன; தே.மு.தி.க., தனித்து களமிறங்கியது. தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.,-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க.,-ம.தி.மு.க.,- கம்யூனிஸ்டுகள் அடங்கிய ஒரு அணியும் தற்போதைய நிலையில் உறுதியாகியுள்ளது.



தமிழகத்தில் 10.5 சதவீத ஓட்டுவங்கியை வைத்திருக்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க., அணியிலும், சராசரியாக ஆறு சதவீத ஓட்டுவங்கியை வைத்துள்ள பா.ம.க., தி.மு.க., அணியிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய லோக்சபா தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை தழுவி, நான்கரை சதவீத ஓட்டுக்களை மட்டும் பா.ம.க., பெற்றது குறிப்பிடத்தக்கது.ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, கூட்டணி குறித்த அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடாததால், தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தே.மு.தி.க.,-பா.ம.க., ஆகிய கட்சிகள் சீட்டு பேரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுதான், இழுபறிக்கு காரணமாக உள்ளது.



தி.மு.க., கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ் - பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்தால் கூட்டணி இறுதியாகிவிடும். முதல்கட்டமாக 29ம்தேதி டில்லி செல்லும் முதல்வர் சோனியாவைச் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, காங்கிரசுக்கான தொகுதிகள் எத்தனை என்பது முடிவாகிவிடும்.அதற்கு அடுத்தபடியாய், பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிப்பங்கீட்டை முடிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 3ம்தேதி நடக்கவுள்ள தி.மு.க., பொதுக்குழு முடிவுக்குப்பின், கூட்டணி குறித்த இறுதி வடிவம் அறிவிப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தி.மு.க., கூட்டணியில் சீட் பற்றாக்குறை இருப்பதால், ஒன்றிரண்டு தொகுதிகளை எதிர்பார்க்கும் குட்டிக கட்சிகள் இந்தப் பக்கம் வருவதற்கு யோசிக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும், அந்த அணியில் இடம்பெறுவதற்கு குட்டிக் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. அ.தி.மு.க., தலைமையும், அவர்களை அங்கீகரிக்க முன்வந்துள்ளது. இதன் காரமாக கூட்டணியை இறுதி செய்வதில், தாமதமும் ஏற்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணி இறுதி செய்யப்பட்டபின், தங்களது கூட்டணியை முடிவு செய்யலாம் என அ.தி.முக., காத்திருக்கிறது. வழக்கமாக தேர்தல் கூட்டணி, பிரச்சாரத்தில் முந்திக் கொள்ளும் அ.தி.மு.க., பொதுச் செயலர் இந்த முறை பின்தங்குவதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கூட்டணி முடிவுகள் தாமதமாவதால், பிரச்சார திட்டங்களும் தாமதமாகி வருகிறது.

About